100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

சுந்தரராஜன்பட்டி ஐஏபி பள்ளி 100% தேர்ச்சி
மதுரையை அடுத்த சுந்தரராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்க (ஐஏபி) பள்ளி பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
 இப் பள்ளியில் தேர்வெழுதிய 14 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் கே.பிரதீப் 500-க்கு 450, ஏ.ரேணுகா 429, ஏ.வசந்தகுமார் 414 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 மதுரை மாவட்டத்தில் பார்வையற்றோர், வாய்பேசாதவர்கள், உடல் ஊனமுற்றோர், இதரர் என மாற்றுத் திறனாளிகள் மொத்தம் 195 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளோர்.
            பார்வையற்றோரில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை சிஇஓஏ பள்ளி நூறு சதவீத தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை சிஇஓஏ பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
 இப்பள்ளி மாணவி ஏ. பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஜே.எச்.தீப்தி, பி.ரேஷ்மி ஹர்சிதா, ஏ. விஜயலட்சுமி, வி. ஜெர்லின் ஜெரூசா, கே. எழில்மதி, ஆர்.எம். சுப்ரியா, ஜி. யாழினி ஆகியோர் 496 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 74 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 176 மாணவர்கள் 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
 சமூக அறிவியலில் 126 பேர், கணிதத்தில் 84 பேர், அறிவியலில் 14 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பள்ளித் தலைவர் மை. ராஜாகிளைமாக்ஸ், செயல் தலைவர் இ.சாமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினர்.
     பள்ளி இயக்குநர்கள் பாக்கியநாதன், ஜெயச்சந்திர பாண்டி, விக்டர் தனராஜ், அசோகராஜ், சவுந்திர பாண்டி, பிரகாஷ், பள்ளி முதல்வர்கள் ஹேமா ஆட்ரே, நசீம்பானு, கோமுலதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 6 அரசுப் பள்ளிகள் 100 % தேர்ச்சி
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
 திருப்பரங்குன்றம் ஒன்றியப் பகுதியில் உள்ள விரகனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 16 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவருமான அ.ராமகிருஷ்ணன் ஆகியோர் பாரட்டிப் பரிசளித்தனர். இதே பள்ளி கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இதேபோல, திருப்பரங்குன்றத்தை அடுத்த வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 31 மாணவர்களும், தோப்பூர் அரசு பள்ளியில் 25 மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர்.
 மேலும், கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் கரடிக்கல் பள்ளியில் 24 மாணவர்கள், தனக்கன்குளம் கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 34 மாணவர்கள், முத்துப்பட்டியில் 26 மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூற்றுக்கு நூறு: தமிழில் 2 பேர், சமூக அறிவியலில் 2500 பேர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் தமிழில் 2 பேரும், சமூக அறிவியலில் 2,567 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
 பத்தாம் வகுப்புத் தேர்வை மொத்தம் 42,803 பேர் எழுதியதில் 40,503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக சமூக அறிவியலில் 2567 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணிதத்தில் 608 பேரும், அறிவியலில் 390 பேரும், தமிழில் இருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகராட்சிப் பள்ளிகளைத் தவிர பிற நிர்வாகங்களின் கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளிலுமே 80 சதவீதத்துக்கும் மேலானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பள்ளிகளில் படித்தவர்களில் 62.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 463 பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், 180 பள்ளிகள் முழுத் தேர்ச்சியை அடைந்திருக்கின்றன.
 முழுத் தேர்ச்சிப் பள்ளிகள் எண்ணிக்கை விவரம்:
 அரசு பள்ளிகள் -23, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 12, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 3, மாநகராட்சிப் பள்ளிகள் 9, அரசு உதவிபெறும் பள்ளிகள் 10, பகுதி உதவிபெறும் பள்ளிகள் 9, சுயநிதிப் பள்ளிகள் 4, சிறப்புப் பள்ளிகள் 2, மெட்ரிக் பள்ளிகள் 108.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com