பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் மதுரை மாவட்டம் 18 ஆவது இடத்தில் உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் மதுரை மாவட்டம் 18 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.05 சதவீதம் குறைந்துள்ளது.
 மதுரை மாவட்டத்தில் 21,613 மாணவர்கள் மற்றும் 21,190 மாணவியர் என 42,803 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 40 ஆயிரத்து 503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 20,036 பேர் மாணவர்கள் (92.76).
20 ஆயிரத்து 467 பேர் மாணவியர் (96.59 சதவீதம்). ஒட்டு மொத்தமாக 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.68 சதவீதமாக இருந்தது.
 180 பள்ளிகள் முழுத் தேர்ச்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 463 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதினர். இதில் 180 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை 137 பள்ளிகளில் இருந்து 9,841 பேர் தேர்வெழுதினர். இதில், 8904 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 90.48 சதவீதம். 23 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.
 மாநகராட்சிப் பள்ளிகள்...: மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 24 பள்ளிகளில் இருந்து 1933 பேர் தேர்வெழுதினர். இதில் 1830 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.67 சதவீதமாகும். 9 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் 1.12 சதவீதம் குறைந்துள்ளது.
 அறிவியலில் அதிகம் பேர் தேர்ச்சி...: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 42 ஆயிரத்து 645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.63 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்ததாக சமூக அறிவியலில் 98.80 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 98.22 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
   மொழிப் பாடத்தில் 97.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 5 பாடங்களிலும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com