உதவி வேளாண் அலுவலர் பணி: பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் பரிந்துரை செய்ய உள்ள பட்டியலை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு மதுரை மாவட்டத்தில் பரிந்துரை செய்ய உள்ள பட்டியலை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     இப் பணியிடத்துக்கு மாநில அளவிலான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்கான உத்தேச பதிவு மூப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் வேளாண் பல்கலை.யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையம் ஆகியவற்றில் வேளாண்மை அல்லது தோட்டக்கலை டிப்ளமோ முடித்தவர்கள் இப் பணியிடத்துக்குத் தகுதியானவர்கள்.
 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2017 ஏப்ரல் 30-இல் 18-இல் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியம். முன்னுரிமையற்றவர்கள் உத்தேச பதிவு மூப்பு விவரம்:
எஸ்சி (அருந்ததி-பெண்கள்) - 2014 அக்.29 வரை பதிவு செய்தவர்கள்.
எஸ்சி (அருந்ததி -பொது) - 2009 டிச.14
எஸ்சி (பெண்கள்) - 2012 ஆக.7
எஸ்சி (பொது) - 2013 டிச.29
எஸ்டி (பொது) - 2010 செப்.15
எம்பிசி (பெண்கள்) - 2013 ஜன.18
எம்பிசி (பொது) - 2005 மார்ச் 18
பிசி (பெண்கள்) - 2012 ஆக.8
பிசி (பொது) - 2000 செப்.19
பிசி (முஸ்லிம்) - 2014 ஜூன் 25
பொதுப் பிரிவினர் (பெண்கள்) - 2013 ஜூலை 10
பொதுப் பிரிவினர் (பொது) - 2006 ஜூலை 6.
 முன்னுரிமை உள்ளவர்களில் 2017 ஏப்.30 வரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியானவர்கள்.
     மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதி, பதிவு மூப்பும் உள்ள மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், மே 29 ஆம் தேதி வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் மேற்படி அலுவலகத்தில் நேரில் சென்று தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்ட விவரத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com