செக்கானூரணி, தேனி குன்னூர் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் இல்லை

மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் தேனி மாவட்டம் குன்னூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில்

மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் தேனி மாவட்டம் குன்னூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி நாடார் புதுத்தெருவைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராமச்சந்திர பிரதீப். இவர் மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் தேனி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடிகளில், எந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது எனக் கேட்டு தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்துக்கு தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் வயி.வைரப்பன், தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பதில் அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சக விதிமுறைகளின் படி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளில் 2 சுங்கச்சாவடிகளுக்கு இ டையே 60 கி.மீட்டர் இருக்க வேண்டும். மேலும் சாலை அமைக்கப்பட்ட தொகை ரூ.100 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும். செக்கானூரணி மற்றும் தேனி குன்னூர் சுங்கச்சாவடிகள் 60 கி.மீட்டருக்கள் அமைந்துள்ளன. மேலும் இந்தச் சாலையில் ரயில்வே மேம்பாலம், சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்குவழிச்சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை அமைப்பு ரூ.100 கோடிக்கு குறைவாகவே உள்ளது. எனவே இந்த 2 சுங்கச்சாவடிகளும் செயல்படாது. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று அந்த பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com