"நெட்' தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு (நெட்) மூட்டா ஆசிரியர் அமைப்பு சார்பில் மதுரையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வுக்கு (நெட்) மூட்டா ஆசிரியர் அமைப்பு சார்பில் மதுரையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
 தேசியத் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இதன்படி வரும் ஜூலை முதல் வாரத்தில் கலை, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் இத் தேர்வை எழுதலாம். மூன்று தாள்களைக் கொண்ட நெட் தேர்வில், தாள் ஒன்றில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதர இரு தாள்களில் விண்ணப்பதாரரின் பட்டமேற்படிப்பு பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.  நெட் தேர்வு தாள் ஒன்றுக்கான பயிற்சி வகுப்பை மூட்டா அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்படி மே 29 முதல் ஜூன் 14 வரை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை மதுரை காக்கா தோப்பு தெருவில் உள்ள மூட்டா அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
 பயிற்சியில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை w‌w‌w.‌m‌u‌ta.‌i‌n​  என்ற இணையதளத்தில் பதிவிறக்கும் செய்து, பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை மே 29-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com