ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு முத்துநகர், மதுரை-சண்டிகர், மதுரை-டேராடூன் விரைவு ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு முத்துநகர், மதுரை-சண்டிகர், மதுரை-டேராடூன் விரைவு ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
 முத்துநகர் விரைவு ரயில் பெட்டிகள் எண்ணிக்கையில் மாற்றம்
 வண்டி எண்.12693/12694: சென்னை எழும்பூர்-தூத்துக்குடி விரைவு ரயிலில் தொழில்நுட்ப காரணங்களுக்காக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று தாற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. இதன்படி அந்த ரயிலில் இனி முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டு, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இரண்டு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மூன்று மற்றும் சரக்குப் பெட்டிகள் இரண்டு அடங்கும்.
 இந்த மாற்றம், சென்னையில் இருந்து இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் மே 27 ஆம் தேதி முதற்கொண்டும், தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் ரயிலில் மே 28 ஆம் தேதி முதற்கொண்டும் நடைமுறைக்கு வர உள்ளது.
 மதுரை-டேராடூன் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு:
 வண்டி எண்.12687/12688: மதுரை-டேராடூன் விரைவு ரயிலில், பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் மே 28 ஆம் தேதி முதலும், டேராடூனில் இருந்து இயக்கப்படும் ரயிலில் ஜூன் 2 ஆம் தேதி முதலும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது.
 மதுரை-சண்டிகர் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு:
 வண்டி எண்.22687/22688: மதுரை-சண்டிகர் விரைவு ரயிலில் பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் மே 28 ஆம் தேதி முதலும், சண்டிகரில் இருந்து இயக்கப்படும் ரயிலில் ஜூன் 2 ஆம் தேதி முதலும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com