திருப்பரங்குன்றம் கோயில் திருமண மண்டபம், விடுதி ரூ.24.50 லட்சத்தில் நவீன முறையில் புதுப்பிப்பு
By DIN | Published on : 14th November 2017 10:46 AM | அ+அ அ- |
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நவீனமுறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் உபயதாரர்கள் மூலம் 5 குளிர் சாதன இயந்திரங்கள், கோயில் சார்பில் 3 குளிர் சாதன இயந்திரங்கள் என மொத்தம் 8 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மண்டபத்தில் டைல்ஸ் பதித்தல், புதிய இருக்கைகள், சமையல் பாத்திரங் கள், அலங்காரங்கள் என ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நவீனப்படுத்தப் பட்டுள்ளன. இதேபோல திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் உள்ள கோயில் தங்கும் விடுதியில் உள்ள அறைகளுக்கு டைல்ஸ் பதித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.