குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 16 பேர் கைது: ஊரகக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தகவல்

மதுரை ஊரகப் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஊரகப் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
      இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய சரகங்களில் நவ. 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கந்து வட்டிக் கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், பெண்களுக்கு எதிரான பாலின குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
      இதுதொடர்பாக 51 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
   மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சென்று காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கந்து வட்டித்தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் 20 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
            கந்து வட்டி புகார் தொடர்பாக அக். 25-ஆம் தேதி முதல் நவ. 13-ஆம் தேதி வரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com