நூலக வரி பாக்கியை செலுத்துவது தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நூலக வரி பாக்கியைச் செலுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு

நூலக வரி பாக்கியைச் செலுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜாசெல்வன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், மதுரை மாவட்ட மைய நூலகத்திற்கு மதுரை மாநகராட்சி ரூ.7 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 67 கிளை நூலகங்கள், 69 கிராமப்புற நூலகங்கள் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 130 பணியாளர்கள், 50 தினக்கூலிகள், துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 
நூலக வரியைச் செலுத்தாததால் நூலகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. புதிய புத்தகங்கள் வாங்குவது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, மின்கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தடைபடுகின்றன. எனவே நூலக வரியை உடனடியாக செலுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரி பாக்கியை நூலகத்துறையிடம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு செயல்படுத்தப்பட வில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜெ.அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், ஊரகம் 
மற்றும் பஞ்சாயத்துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய 
உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com