கள்ளந்திரி, மேலூர் பகுதியில் கனமழை
By DIN | Published on : 15th November 2017 08:28 AM | அ+அ அ- |
கள்ளந்திரி, சிட்டம்பட்டி, மேலூர் சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கனமழை பெய்தது.
கடந்தசில நாள்களாக மழை பெய்யாதிருந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் கனமழை பெய்தது. கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதியில் கள்ளந்திரியில் 25 மி.மீ., சிட்டம்பட்டியில் 10.08 மி.மீ. இடையபட்டியில் 6.4 மி.மீ., மேலூரில் 10.08 மி.மீ., தனியாமங்கலத்தில் 4மி.மீ.மழை பதிவாகியுள்ளது. முதல்போக சாகுபடி கடைமடைப் பகுதிகளுக்கு கால்வாய்களில் போதிய தண்ணீர் விநியோகிக்கவில்லை.
கூடுதல் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சிட்டம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை சிலதினங்களுக்கு முன் முற்றுகையிட்டு ஆப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் கனமழை பெய்துள்ளது விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.