மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.17) நடைபெறுகிறது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். இக் கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.