மதுரை அருகே 7 மாத பெண் குழந்தை மர்மச் சாவு: கணவர் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

மதுரை அருகே 7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவத்தில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.

மதுரை அருகே 7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவத்தில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள கருவனூர் காலனி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(22). கட்டட வேலை பார்த்து வரும் ஆறுமுகம், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரியை, கடந்த 2013-இல் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 மாதத்தில் மகாலட்சுமி என்ற பெண்குழந்தை உள்ளது.
ஆறுமுகத்துக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அதை புவனேஷ்வரி கண்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மதுரை அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை, புவனேஷ்வரி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புவனேஷ்வரி தூங்கச்சென்றுவிட்டார். அதிகாலையில் புவனேஷ்வரி எழுந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்துள்ளது. இதையடுத்து நாராயணபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் நாடித்துடிப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தல்லாகுளம் காவல்நிலையத்துக்கு புகார் தெரிவிக்கச் சென்ற புவனேஷ்வரியை விசாரித்த போலீஸார், எம்.சத்திரப்பட்டி காவல்நிலையத்துக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற புவனேஷ்வரி அளித்தப்புகாரில், தனது குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது கணவர் ஆறுமுகம் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் குழந்தையின் சடலம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாத தாய் புகார் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டஅடையாளம் இல்லை. மேலும் உடலில் எவ்வித வெளிக்காயங்களும் இல்லை. எனவே குழந்தையின் உடல் உள் உறுப்புகள் விஷ்ரா எனப்படும் ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விஷம் ஏதேனும் கொடுத்திருந்தாலோ அல்லது வேறு வகையில் மரணம் ஏற்பட்டிருந்தாலோ ரசாயனப்பரிசோதனையில் தெரிந்து விடும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com