மதுரையில் குழந்தைகள் தின விழா

மதுரையில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரையில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
 மதுரை நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளியில் வாசிப்பு நாளாக நேரு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஜே.ஜோசப்ஸ்டாலின் தலைமை வகித்தார். மழலையர் பிரிவு சார்பில் பாடல்கள் அடங்கிய குறுவட்டும், வகுப்பிதழும் வெளியிடப்பட்டன. போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் நிர்வாக அதிகாரி (மதுரை மற்றும் திருச்சி) தயாசியாமளா, பள்ளி முதல்வர் எஸ்.சீதாலெட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பள்ளி துணைமுதல்வர் என்.கிருபாவதி, தலைமை ஆசிரியர் எல்.லதாதிரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி செளமியா வரவேற்றார். பிரின்சி நன்றி கூறினார்.
 யானைமலை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் மோசஸ் முன்னிலை வகித்தார். பள்ளி குழந்தைகள் நேரு திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர். அவர்களது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் எட்வின்தேவா, சையது இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை சாந்தா நன்றி கூறினார்.
 இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சண்முகவேலு முன்னிலை வகித்தார். ஆசிரியர் மகேந்திரபாபு, ஆசிரியை மலர்விழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியை தேவி நன்றி கூறினார்.
 மதுரை காங்கிரஸ் சார்பில் தமுக்கம் மைதானம் அருகேயுள்ள ஜவாஹர்லால் நேரு திருவுருவச் சிலைக்கு கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
 கவியரசு கண்ணதாசன் நற்பணிமன்றம் சார்பில் நேருவின் பிறந்த நாள் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கவிஞர் சு.கோபாலகிருஷ்ணன் கவிதை வாசித்தார். மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் குணமும் வளமும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தியாகதீபம் அ. பாலு வரவேற்றார். வ.முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com