பேரிடர் மேலாண்மை: ஆட்சியர்  கயிறு பாலத்தில் நடந்து செயல்விளக்கம்

வெள்ளப்பெருக்கு காலத்தில் அமைக்கப்படும் கயிறு பாலத்தைக் கடப்பது குறித்த செயல்விளக்கத்தில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பங்கேற்று பாலத்தைக் கடந்து செயல்விளக்கம் அளித்தார்.

வெள்ளப்பெருக்கு காலத்தில் அமைக்கப்படும் கயிறு பாலத்தைக் கடப்பது குறித்த செயல்விளக்கத்தில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் பங்கேற்று பாலத்தைக் கடந்து செயல்விளக்கம் அளித்தார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், பேரிடர் மேலாண்மை குறித்து இரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.  பேரிடர் காலங்களில் துரிதமாகச் செயல்படுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கள அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து புதன்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     பெருமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில்,  அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்பது குறித்து மாநகராட்சி நீச்சல் குளத்தில்  செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல்,  வெள்ளத்தில் சாலை அல்லது பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கயிறு பாலம் அமைத்து மீட்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இந்த செயல் விளக்கத்தைத் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர், கயிறு பாலத்தில் அவரே ஏறி நடந்து சென்று  களப் பணியாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com