மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க இயன்முறை பயிற்சியாளர் விண்ணப்பிக்க அழைப்பு

மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, தாற்காலிகமாக மதிப்பூதிய அடிப்படையில்

மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க, தாற்காலிகமாக மதிப்பூதிய அடிப்படையில் இயன்முறைப் பயிற்சியாளர்கள்,  பேச்சுப் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து விடுத்துள்ள செய்திக் குறிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சார்பில் இயன்முறைப் பயிற்சியாளர், பேச்சுப் பயிற்சியாளர்  தேர்வு செய்யப்படவுள்ளனர்.
     முற்றிலும் தாற்காலிகமாக மாதம் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தில் 9 இயன்முறை மருத்துவர்கள், ஒரு தொழில் சார் பயிற்சியாளர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர் ஒருவர் எனத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.   
    எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அனைத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்று நகல்களுடன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
    இயன்முறைப் பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் இளங்கலை பிஸியோதெரபியில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.  தொழில் சார் பயிற்சியாளர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பிப்போர் ஆடியோலஜி, பேச்சு மொழி பேதாலஜி மற்றும் பி.எஸ்சி. பேச்சு பேதாலஜியில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.
    தகுதியுடையவர்கள் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம்,  அனைவருக்கும் கல்வி இயக்கம், எச்.ஏ.கே. சாலை, தல்லாகுளம், மதுரை -2 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com