காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சி

மதுரையில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை இன்னிசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறையின் குதிரைப்படை அணிவகுப்பும் நடைபெற்றது.
மேலும் பொதுமக்களுக்கு சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்து பாய்ஸ் கிளப் குழுவினர் மூலம் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. போக்குவரத்து விதிகள் தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் விளக்கிக்கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல்துறை மோப்ப நாய்கள் பங்கேற்ற சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான்கு மோப்ப நாய்கள் பங்கேற்றன. கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது, பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மருந்து மற்றும் வெடிபொருள்களை கண்டறிவது, போதைப்பொருளை கடத்தி வருபவர்களை மோப்பம் பிடித்து கண்டறிவது போன்றவற்றை மோப்ப நாய்கள் செய்துகாட்டின. மேலும் தடைகளை தாண்டுவது போன்ற சாகசங்களிலும் மோப்பநாய்கள் ஈடுபட்டது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் மாநகரக் காவல் துணை ஆணையர்கள் மகேஷ்(தலைமையிடம்), அருண் பாலகோபாலன்(போக்குவரத்து), ஈஸ்வரன்(ஆயுதப்படை), கூடுதல் உதவி ஆணையர் முருகேஷ் உள்பட காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com