தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: மதுரையில் 6883 பேர் பங்கேற்பு

அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வில் மதுரை மாவட்டத்தில் 6883 பேர் சனிக்கிழமை பங்கேற்றனர்.

அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வில் மதுரை மாவட்டத்தில் 6883 பேர் சனிக்கிழமை பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 8714 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் என 24 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 24 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் தேர்வறைகளில் 532 கண்காணிப்பாளர்களும், தேர்வு மைய வாரியாக 96 உடற்கல்வி ஆசிரியர்களும் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்வு மையங்கள் முன்பு காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
தேர்வறைக்குள் சென்றவர்கள் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். செல்லிடப்பேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தேர்வு மையத்துக்குள்ளே கூட எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலையில் மட்டும் நடந்த தேர்வு எளிமையாக இல்லை என தேர்வெழுதியவர்கள் கூறினர்.
தேர்வு மையங்களை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் கே. சசிகலா நேரில் பார்வையிட்டார். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து உள்ளிட்டோரும் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com