பத்திரப் பதிவுத் துறையில் புதிய மென்பொருள் நாளை அறிமுகம்: கூடுதல் பதிவுத்துறை தலைவர் தகவல்

மதுரை மண்டல பத்திரபதிவுத்துறை சார்பில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் வாயிலாக கணினி வழி இணையதள பத்திரப் பதிவு செப்.18 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மதுரை மண்டல பத்திரபதிவுத்துறை சார்பில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் வாயிலாக கணினி வழி இணையதள பத்திரப் பதிவு செப்.18 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு தலைமைவகித்து கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் மேலும் பேசியது: பத்திரப் பதிவை தற்போது விரைவுபடுத்தி வருகிறோம். மக்கள் வெகுநேரம் காத்திப்பதை தவிர்க்க பத்திரப் பதிவு துறையில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யும் நேரத்தை முன்கூட்டியே குறித்து கொள்ளலாம். தற்போது பத்திரப் பதிவின் அனைத்து தகவல்களும் மாவட்டத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த புதிய மென்பொருள் மூலம் சென்னையில் உள்ள மத்திய தகவல் சேமிப்பு மையத்தில் உடனுக்குடன் தகவல் சேமிக்கப்படும். இதன்மூலம் ஆவணங்கள் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.
தமிழகத்தில் 51 மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது. மதுரை மண்டலத்தில் 9 மாவட்ட பதிவு அலுவலகத்திற்கு உள்பட்ட சார் பதிவு அலுவலகங்களில் வரும் 18-ம் தேதி முதல் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 51 அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் தமிழகமெங்கும் இந்த்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டம் முழுமை பெற்றவுடன் தமிழகத்தில் எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யலாம். மேலும் வேறு நபர் போலியாக பத்திரப் பதிவு செய்தால் இடத்தின் உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் செல்லும் வகையில் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை மண்டல ணை பதிவுத்துறை தலைவர் சிவக்குமார், மதுரை தெற்கு உதவி பதிவுத் துறை தலைவர் பால்பாண்டி, மாவட்ட பதிவாளர்கள், சார் -பதிவாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com