தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து .
 இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் தாக்கல் செய்த மனு:
 தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றார்கள். பின்னர் 9 ஆம் தேதி என அறிவித்தனர்.
 ஆனால் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பார் கவுன்சில் செயற்குழுவின் 5 ஆண்டு பதவி காலம் முடிந்தும் தொடர்கிறது. இவர்கள் வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்தி பதவியில் தொடர திட்டமிட்டு செயல்படுகின்றனர்.  தேர்தல் அலுவலர்களாகச் செயல்பட்ட 2 ஓய்வுபெற்ற நீதிபதிகளும் அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளனர். 
எனவே உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை நியமனம் செய்து பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com