வெவ்வேறு சாலை விபத்துகளில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் சாவு

திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் ஞாயிறு, திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் ஞாயிறு, திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 
திருமங்கலத்தை அடுத்த வில்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (24). இவர், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இருந்து திருமங்கலத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ராஜபாளையம் நான்கு வழிச்சாலை  அணுகுச் சாலை அருகே வந்தபோது, நிலைதடுமாறி வழிகாட்டி பெயர் பலகையில் மோதினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். 
 திருமங்கலம் விடத்தைகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (29). இவர், தனது உறவினர் சுரேஷ்குமாருடன் (32) திருமங்கலத்தில் இருந்து திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கூடக்கோயில் நோக்கி சென்றனர்.  கூடக்கோயில் மல்லிகை நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியே வந்த பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், பாண்டியராஜன் வழியிலேயே உயிரிழந்தார். சுரேஷ்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூடக்கோயில் போலீஸார் விசாரிக்கின்றனர். பாண்டியராஜனுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் அவர் உயிரிழந்தது, உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உசிலம்பட்டியில்: விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் பாண்டி (25). இவர், உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு திங்கள்கிழமை வந்தார். பின்னர், மீண்டும் சொந்த ஊருக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். செல்லம்பட்டி அருகே சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com