மதுரையில் காரில் கடத்திய 124 கிலோ கஞ்சா பறிமுதல்:  இருவர் மீது வழக்கு

மதுரையில் காரில் கடத்தப்பட்ட 124  கிலோ கஞ்சாவை வியாழக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

மதுரையில் காரில் கடத்தப்பட்ட 124  கிலோ கஞ்சாவை வியாழக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
   தெலங்கானாவில் இருந்து மதுரை வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் மதுரை-தேனி சாலையில் முடக்குச்சாலை பகுதியில் போலீஸார் புதன்கிழமை நள்ளிரவில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த இருவர் போலீஸாரைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 
 போலீஸார் விரட்டிச் சென்றும் இருவரையும் பிடிக்க முடியவில்லை. 
இதையடுத்து அவர்கள் விட்டுச்சென்ற காரை சோதனையிட்டபோது அதில் 124 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த ஆவணங்களை சோதனையிட்டபோது, தப்பிச்சென்ற இருவரும் தெலங்கானா வாரங்கல் மாவட்டம் ஹனாபேட்டை சேர்ந்த ராஜூ என்ற மகேந்திர பனோத், விசாகபட்டினம் கஞ்சாரா பாலா பகுதியைச் சேர்ந்த நரசிம்மராவ் என்பதும் தெரிந்தது. 
இதையடுத்து ரூ12.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com