மேலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள்  மீண்டும் வேலை நிறுத்தம்

மேலூர் நகராட்சி துப்புரவுப் பணிக்கு கூடுதல் ஆள்களை நியமிக்க வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

மேலூர் நகராட்சி துப்புரவுப் பணிக்கு கூடுதல் ஆள்களை நியமிக்க வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
    மேலூர் நகராட்சியின் 27 வார்டுகளில் துப்புரவுப்பணிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 பேர் பணியில் இருந்தனர். அவர்களில் பலர் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது 47 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். 
  இதனால் துப்புரவுப் பணியை பணியைச் சரிவரச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை இல்லாததால், துப்புரவுத் தொழிலாளர்கள் ஏற்கெனவே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.மேலும் நகராட்சியில் தற்காலிகமாக துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர். 
ஆனால், இதுவரை புதிதாக யாரும் நியமிக்ப்படவில்லை. தற்போது பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் 47 பேரில் 15 பேர்  விரைவில் ஓய்வுபெறவுள்ளனர். எனவே, துப்புரவுப் பணிக்கு கூடுதல் ஆள்களை நியமிக்க வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தை துவக்கினர். 
 நகரில் சுகாதாரக்கேடு: மேலூர் நகரில் சுகாதாரப் பணிக்கு போதிய ஆள்கள் இல்லாததால், நகரில் ஆங்காங்கே குப்பைக்குவியல்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேலூர் தினசரி சந்தையில் குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. நகரில் குப்பைகளை அகற்ற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com