மதுரை, சோழவந்தானில் நாளை மின்தடை


மதுரை, சோழவந்தான் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (ஆக.13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் மெட்ரோ செயற்பொறியாளர் ஆர். சுஜா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை சுப்பிரமணியபுரம் மற்றும் மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
எனவே, தெற்குவெளி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணி கோயில் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதிகள், பாண்டியவேளாளர் தெரு, மேலவாசல்.
கூடலழகர் பெருமாள் கோயில் தெரு பகுதிகள், டி.பி.கே.சாலை, மேலவடம்போக்கித் தெரு, பெரியார் பேருந்து நிலையம், கட்ராபாளையம், மேலவெளி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு பகுதிகள், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ்.ரோடு.
கீரைத்துறை, மாகாளிபட்டி, நல்லமுத்துப்பிள்ளை சாலை, சிந்தாமணி சாலை, செயின்ட்மேரீஸ் பள்ளி பகுதிகள், பிள்ளையார்பாளையம், சின்னக்கடைத் தெரு, மஞ்சணக்காரத் தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்குமாசி வீதி, மறவர்சாவடி பகுதிகள், காமராஜர்புரம், வாழைத்தோப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம்பள்ளிவாசல் தெரு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் மின்தடை: சோழவந்தான் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்களம், காடுபட்டி, இரும்பாடி, ஆங்கொட்டாரம், ரிசபம், ராயபுரம், சோழவந்தான் மற்றும் நகரி தொழிற்சாலைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் சோழவந்தான் செயற்பொறியாளர் மு. மனோகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com