மாணவர் இணைப்புத் திட்டம்: ஒரே நாளில் 300 பேர் கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தனர்

மாணவர் இணைப்புத் திட்டத்தில் மதுரை கடவுச்சீட்டு சேவை மையத்தில் 300 மாணவர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தனர்.

மாணவர் இணைப்புத் திட்டத்தில் மதுரை கடவுச்சீட்டு சேவை மையத்தில் 300 மாணவர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தனர்.
  மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் 2007 டிசம்பர் 7 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்கள் இடம்பெறுகின்றன.
 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழியில் முன்பதிவு பெற்று மதுரை மண்டல கடவுச்சீட்டு மையத்தின்கீழ் செயல்பட்டு வரும் மதுரை கோச்சடை, திருநெல்வேலி கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் நாகர்கோவில், விருதுநகர், தேவகோட்டை, கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய தபால் நிலையங்களில் உள்ள சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர்.
 அதோடு, அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட மாணவர்கள் இணைப்புத் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவர்கள் பலரும் கடவுச்சீட்டு பெற்று வருகின்றனர். 
  இதன்படி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 300 பேர்,  மதுரை கோச்சடையில் உள்ள கடவுச்சீட்டு சேவை மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம். புகார் மற்றும் ஆலோசனைகளை கடவுச்சீட்டு அலுவலரிடம் 0452-2526525 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.   மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் அருண் பிரசாத் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com