அரிட்டாபட்டியில் புவியியல் துறையினர் ஆய்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மலைப்பகுதியில் ஆய்வுக்கு பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மலைப்பகுதியில் ஆய்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து புவியியல் துறையினர் திரும்பிச் சென்றனர். 
மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி மலை மற்றும் கீழவளவு, கீழையூர் மலைப்பாறைகளுக்கடியில் பல்வேறு வகையான தாதுப்பொருள்கள் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில்  இங்கு "டங்ஸ்டன் கார்பைடு' படிவம்  தொடர்பான ஆய்வுக்கு புவியியல் துறையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், பிரபாகர் தலைமையில் அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை  வந்தனர். அவர்களுக்கு மேலூர் சார்பு-ஆய்வாளர் மாலைமுத்து தலைமையில் போலீஸார் பாதுகாப்புக்கு வந்தனர். புவியியல் துறையினர் ஆய்வுக்கு அரிட்டாபட்டி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, புவியியல் துறையினர் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: அரிட்டாபட்டி மலை தொன்மையான சின்னங்கள் நிறைந்தது. லகுலீஸர் என்ற சிவன் குடவறைக்கோயில், பத்திரகாளியமன் கோயில் மற்றும் பல கல்வெட்டுக்களும் உள்ளன.
 தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாதுப் பொருள்களுக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com