டிசம்பர் 11 மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரையில் சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, மகாத்மா காந்தி நகர், கோ.புதூர் பகுதி துணை மின் நிலையங்களில்

மதுரையில் சமயநல்லூர், மாணிக்கம்பட்டி, மகாத்மா காந்தி நகர், கோ.புதூர் பகுதி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
   இதுகுறித்து சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் என். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமயநல்லூர், மாணிக்கம்பட்டி துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை பிரதான சாலை, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, ஊர்ச்சேரி, அலங்காநல்லூர், டி. மேட்டுப்பட்டி, வாவிடைமருதூர், ராஜாக்கள்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, மேட்டுபட்டி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதேபோல், கோ.புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜீ. மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோ. புதூர், மகாத்மா காந்தி நகர் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாரதி உலா சாலை, வல்லபாய் சாலை, ஜவஹர் சாலை, சின்னசொக்கிகுளம் பகுதி, டிஆர்ஓ காலனி தெற்கு, புதுநத்தம் சாலை, புதூர் வண்டிபாதை, பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை (பிபி குளம் முதல் பாலமந்திரம் வரை), விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், நரிமேடு, மீனாம்பாள்புரம், அழகர்கோயில் சாலை(தமுக்கம் முதல் ஐடிஐ பேருந்து நிறுத்தம் வரை),  விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவகாடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com