மதுரையில் சிலம்ப வீரர்கள் நடுவர்களுக்கான பயிற்சி முகாம்

மதுரையில் மாநில மற்றும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும்  நடுவர்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் மாநில மற்றும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும்  நடுவர்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை உலகத் தமிழ்ச்சங்க அரங்கில் தமிழக சிலம்ப அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப வீரர்கள் மற்றும் நடுவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை அரங்கில் வெளிப்படுத்தினர். இதில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக தேர்வுக்குழுவினர் கூறியது: ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுகளில் சிலம்பத்தை இடம் பெறச் செய்யும் விதத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாடத்திட்டங்களை வரைமுறைச் செய்து சிலம்பம் மற்றும் அதனைச் சார்ந்த மரபுக் கலைகளை மெருகேற்றச் செய்வதன் முயற்சியாக இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 
பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக்கலை விளையாட்டுகளில் ஏற்கனவே உள்ள கராத்தே, ஜூடோ, மற்றும் டேக் வாண்டோ விளையாட்டுகளோடு சிலம்ப விளையாட்டையும் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சிலம்ப விளையாட்டில்  தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் 
மேற்பட்ட  வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் உள்ளனர்.
சென்னையில் பிப்ரவரி மாதம் மாநில அளவிலான சிலம்பப் போட்டியும், கோவாவில் தேசிய அளவிலான போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான சிலம்ப வீரர்கள் மற்றும் நடுவர்களை தேர்வு செய்ய இதுபோன்ற பயிற்சி அரங்கங்கள் நடத்தப்படுகின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com