மதுரையில் தூய்மை இந்தியா திட்டக் குழு ஆய்வு

கடந்த ஆண்டு (2016-17) தூய்மை இந்தியா திட்டத்தில் 430 நகரங்கள் போட்டியிட்ட நிலையில், மதுரை 54 ஆவது இடத்தை வகித்தது.

கடந்த ஆண்டு (2016-17) தூய்மை இந்தியா திட்டத்தில் 430 நகரங்கள் போட்டியிட்ட நிலையில், மதுரை 54 ஆவது இடத்தை வகித்தது. ஆனால், நடப்பாண்டில் (2017-18) தேசிய அளவில் 4,041 நகரங்களுக்கும் அதிகமாக போட்டியிடுகின்றன. 
ஆகவே நடப்பாண்டில் மதுரை மாநகராட்சி தூய்மை நகர்ப் பட்டியலில் இடம் பெற கடும் போட்டிகளைச் சந்திக்கும் நிலை உள்ளது. தூய்மை இந்தியா திட்ட விதியை பின்பற்றி மதுரையில் சுகாதார மேம்பாடு உள்ளிட்டவை பராமரிக்கப்படுகிறதா? என்பதை அறிய தேசிய நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறையிலிருந்து டாக்டர் பிஜூ தலைமையிலான மூவர் குழு 
மதுரையில் திங்கள், 
செவ்வாய்க்கிழமைகளில் ஆய்வை மேற்கொண்டனர். 
அக்குழுவினர் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப் பிரிவின் பணிகளை ஆய்வு செய்தனர்.  
பொதுமக்கள் அளித்த புகார்கள், அதை தீர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கை, தகவல் மையத்துக்கு வரும் புகார்கள்,  இணையதளம், கட்செவியஞ்சல் வசதிகளில் புகார் தெரிவித்தவர்களது கருத்து என சிறப்புக்
குழுவினரின் ஆய்வு அமைந்தது. புதன்கிழமையும் ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com