10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மதுரையில் 80,147 மாணவ, மாணவியர் பங்கேற்பு

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  பொதுத் தேர்வுகளில் 80147 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  பொதுத் தேர்வுகளில் 80147 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 16  இல் தொடங்கி,  ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 470 பள்ளிகளைச் சேர்ந்த 41,724 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கல்வி மாவட்ட அளவில் மதுரையில் 19,262 பேரும், மேலூரில் 13,806 பேரும், உசிலம்பட்டியில் 8,656 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
  பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேர்வு மையங்கள் 131 பள்ளிகளில் அமைக்கப்படவுள்ளன. தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 131 பேரும்,  தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 22 பேரும் இடம் பெற்றுள்ளனர். 
   பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 304 பள்ளிகளைச் சேர்ந்த 38,423 பேர் எழுதுகின்றனர். 
கல்வி மாவட்ட  அளவில் மதுரையில் 19,216 பேரும், மேலூரில் 11,279 பேரும், உசிலம்பட்டியில் 7,928 பேரும் தேர்வை எழுதுகின்றனர். இதில் 1,467 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலூர் கல்வி மாவட்டத்தில் மட்டும் 400 தனித் தேர்வர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். 
தேர்வுக்காக 122 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் 22  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றவுள்ள நிலையில் 111 பேர் முதன்மைக் கண்காணிப்பாளர் நிலையில் தேர்வை கண்காணிக்க உள்ளனர். 
பிளஸ் 1 தேர்வு: நடப்பாண்டில் பிளஸ் 1 தேர்வும் அரசுப் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அத்தேர்வானது மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரை மாவட்ட அளவில் 309 பள்ளிகளைச் சேர்ந்த  38,648 பேர் எழுதுகின்றனர். அவர்களுக்காக 111 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com