பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரசாரம்

மதுரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரசார கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மதுரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரசார கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை ஏக்தா அமைப்பு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள்,  சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பிரசாரத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான பிரசார நிகழ்வு காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வை வலியுறுத்தி பலூன் பறக்க விடப்பட்டது. வரதட்சிணை கொடுமை தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் மல்லிகா பங்கேற்று, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, பெண்களைப் பாதுகாப்பது, காவல்துறை உதவியை கோருவது, பெண்களின் உரிமைகள் தொடர்பாக உரையாற்றினார். 
இதையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ஏக்தா அமைப்பின் தலைவர் பிம்லா தலைமையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், மகளிர் அமைப்பினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com