தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தவுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பருவமழை பொய்த்துப் போனதால் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயக் கடன்களை வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதை கைவிட வேண்டும். அதோடு விளைபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்காக தனி விவசாய ஆணையம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் அறுவடை நடக்கும்போது, செலவு கணக்குகளை கருத்தில் கொண்டு பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்தைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் குமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இதற்கு அனுமதி கோரி நவம்பர் 20-ஆம் தேதி தமிழக காவல்துறை டிஜிபியிடம் மனு செய்தோம். அவர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடமும் மனு அளிக்குமாறு கூறினார். இது சாத்தியமில்லாதது.
ஒவ்வொரு மாவட்டத்துக்குள்ளும் எந்த தேதியில் செல்வோம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனவே நூறு நாள்கள் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரசார பயணத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி. ராஜமாணிக்கம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com