தியாகராஜர் கல்லூரியில் முத்தமிழ் விழா

தியாகராஜர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், முத்தமிழ் விழா வியாழக்கிழமை தொடங்கியது.

தியாகராஜர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், முத்தமிழ் விழா வியாழக்கிழமை தொடங்கியது.
    முதல் நாள் இயற்றமிழ் விழாவில்,  சிலம்பிலும் மேகலையிலும் சிந்தை நிறைந்த செய்திகள் என்ற தலைப்பில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உரையாற்றினார்.
     அதைத் தொடர்ந்து, கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் சிலம்பும் மேகலையும்- பதித்ததும், பதிந்ததும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் திலகபாமா, ஆசை, கிருத்திகா ஆகியோர் கவியுரையாற்றினர்.     கல்லூரி முதல்வர் து. பாண்டியராஜா, தமிழ்த் துறைத் தலைவர் (பொறுப்பு) இராம. மலர்விழி மங்கையர்க்கரசி, இணைப் பேராசிரியர் சு. காந்திதுரை ஆகியோர் பேசினர். தொடர்ந்து,  தமிழ்த் துறை மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com