உச்சப்பட்டி கிராம தத்தெடுப்பு விழா

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உச்சப்பட்டி கிராம தத்தெடுப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உச்சப்பட்டி கிராம தத்தெடுப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 
 விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.நேரு தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அழகேசன் வரவேற்றார். கல்லூரி உபதலைவர் ஆர். ஜெயராமன், துணைச்செயலர் கே.ராஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இ.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், விவசாய கடன், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு , கிராம பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் சுயதொழில், காப்பீடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை கிராமத்தினருக்கு கொண்டு சென்று பயன்பெறச் செய்வதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பா.அன்புஒளி, சீ.காயத்திரிதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com