கல்பட்டிச்சத்திரம்-தாமரைப்பாடி வழித்தடத்தில் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட  ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

கல்பட்டிச்சத்திரம்-தாமரைப்பாடி வழித்தடத்தில் மார்ச் 14 முதல் 27 ஆம் தேதி வரை தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கல்பட்டிச்சத்திரம்-தாமரைப்பாடி வழித்தடத்தில் மார்ச் 14 முதல் 27 ஆம் தேதி வரை தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மதுரைக் கோட்டத்துக்கு உட்பட்ட கல்பட்டிச்சத்திரம்-தாமரைப்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்ற காரணத்தால் மார்ச் 14 முதல் 28 ஆம் தேதி வரை அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்த காரணத்தினால் ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்படுகிறது.
ரயில்கள் விபரம்:  மார்ச் 14 மற்றும் 28 ஆம் தேதி மணப்பாறை வழியே இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த சென்னை-குருவாயூர்/தூத்துக்குடி விரைவு ரயில்(வண்டி எண்.16127/16129) வழக்கம்போல இயங்கும். மார்ச் 15 முதல் 27 ஆம் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து சில மணி நேரங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்.56822) வழக்கம் போல காலை 11.25 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
தாற்காலிக ரத்து: தஞ்சாவூர்-சோளகம்பட்டி இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில்(வண்டி எண்.56822/56821) மார்ச் 13 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சி மற்றும் மயிலாடுதுறை இடையே இயக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com