குரங்கணி தீ விபத்து: தங்கும் கூடத்தில் தண்ணீர் வராததால் வெளியேறிய குடும்பத்தினர்

மதுரை அரசு மருத்துவமனையில் குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட

மதுரை அரசு மருத்துவமனையில் குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூடத்தில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் இல்லாததால் குடும்பத்தினர் மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுதியில் தங்கினர்.
தேனி மாவட்டம் குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கிய 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அதில் 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு ஏதுவாக தீக்காய சிகிச்சைப்பிரிவு அருகே குளியலறை, கழிப்பறை வசதிகளுடன் தங்கும் கூடம் ஒதுக்கப்பட்டது. அங்கு குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் மருத்துவமனையில் இருந்தே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் குடும்பத்தினர் தங்கியிருந்த கூடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கழிவறையில் தண்ணீர் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்தனர். 
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் தண்ணீர் பிரச்னை தீரவில்லை. இதனால் காயமடைந்த சிலரின் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் நோயாளிக்கு துணையாக இருந்துகொண்டு மற்றவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறி அருகில் உள்ள விடுதிகளில் தங்கினர். இதில்  9 பேர் சிகிச்சைக்கு அனுமதிப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 2 பேரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சாய்வசுமதி என்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com