திருப்பரங்குன்றத்தில் ரூ.21 லட்சத்தில் குடிநீர் வசதி

திருப்பரங்குன்றம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. 

திருப்பரங்குன்றம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. 
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கூடல்மலைத் தெரு, வண்ணார்தெரு, குட்டையாபிள்ளை சந்து ஆகிய பகுதிகளில் தலா ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீடில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 96 ஆவது வார்டுக்குள்பட்ட ஜெ.ஜெ.நகர்,  99 ஆவது வார்டுக்குள்பட்ட பாலசுப்பிரமணியன் நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 
இதனை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். அவருடன் முன்னாள் மான்ற உறுப்பினர்கள் இரா.முத்துக்குமார், ஹமிதா அக்பரலி, பொன்.முருகன், அதிமுக பகுதி செயலர்கள் பன்னீர்செல்வம், ப.மோகன்தாஸ், மாநகராட்சி உதவி பொறியாளர் எம்.முனீர்அகமது, துணை பொறியாளர் ஏ.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com