மதுரைக்கு புதிய குடிநீர்த் திட்டம்: கருத்துக் கேட்பு கூட்ட நேரத்தில் மாற்றம்

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தின் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வரும் 16 ஆம் தேதி  (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தின் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வரும் 16 ஆம் தேதி  (வெள்ளிக்கிழமை) மாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகருக்கு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் தேனி மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பண்ணைப்பட்டி பகுதி வரை குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. 
 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் குழாய் வழியாக மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு 56 இடங்களில் அமைக்கப்படும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் மதுரையில் விநியோகிக்கப்படவுள்ளது.
ஆகவே மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) நடைபெறவுள்ளது. 
சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிர்வாகக் காரணங்களால் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும். 
ஆகவே அந்தந்தப் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com