மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்  காசில்லா மருத்துவம் அளிக்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் காசில்லா மருத்துவம் பெறும் நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் காசில்லா மருத்துவம் பெறும் நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் குரு.தமிழரசு தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஆர்.சங்கரன், மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  மூட்டா முன்னாள் தலைவர் எஸ்.விவேகானந்தன், ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.150 பிடித்தம் செய்து சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல,  மாதம் ரூ.150 பிடித்தம் செய்யப்படும் ஓய்வூதியர்களுக்கும் சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் அனுமதிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவுத் தொகையை மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக வழங்கி, காசில்லா மருத்துவம் என்பதை உறுதி செய்ய வேண்டும். 
பொதுமக்களுக்கு வழங்கப்படும் தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தைப் போல ஓய்வூதியர் மருத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். ஊராட்சி, 
பேரூராட்சி, நகராட்சி ஓய்வூதியர்களையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் வழியாக அரசுக்கு 
அனுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com