அத்திப்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

உசிலம்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டியில் வியாழக்கிழமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும்

உசிலம்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டியில் வியாழக்கிழமை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் அத்திப்பட்டி ராமையா நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
 இதற்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநிலத் தலைவர் கர்ணன் தலைமையில், வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், மாநிலத் துணைத்தலைவர் சேகரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்தழகு ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.டி.ஓ, முருகேசன், வட்டாட்சியர் இளமுருகன், தனித்துணை வட்டாட்சியர் பூமாயி ஆகியோர் பாராட்டப்பட்டனர். இதனையடுத்து சென்ற ஆண்டு அரசுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதைத் தொடர்ந்து அத்திபட்டி பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கந்தசாமி மற்றும்  சாப்டூர் காவல்துறையினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com