உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதர் விற்பனை நிலையம் திறப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய விற்பனை நிலையத்தை

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய விற்பனை நிலையத்தை  நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்பு தமிழகத்துக்கு உண்டு. பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். தமிழகத்தில் பனைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பழமையை நோக்கிச் செல்லும் மக்கள் இயற்கை உணவுகளையே உட்கொள்ள விரும்புகின்றனர். பனை மரத்தின் தலை முதல் அடி வரை உள்ள அனைத்துப் பாகங்களில் இருந்தும் கிடைக்கும் மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உண்ணும் பொருள்களும், வீட்டு உபயோகப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. பனைமரம் மண் அரிப்பைத் தடுத்து நீர்நிலைகளை எவ்வித சிரமமுமின்றி பாதுகாக்கும். ஏழை பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
 நீதிபதிகள் டி.ராஜா, எஸ்.வைத்தியநாதன், ஜி.ஆர்.சுவாமிநாதன், கிருஷ்ணன் ராமசாமி, ஜி.கே.இளந்திரையன், ஆர்.பார்த்திபன், ஆர்.தாரணி, ஜெயச்சந்திரன், என்.சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com