ரயில்கள் பயண நேரங்களில் மாற்றம்

விருதுநகர், கல்பட்டிசத்திரம், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக

விருதுநகர், கல்பட்டிசத்திரம், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
  விருதுநகர்-நல்லி-கோவில்பட்டி-குமாரபுரம்  ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 திருநெல்வேலி -மயிலாடுதுறை/ ஈரோடு பயணிகள் ரயில்(எண்.56826) ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (அக்.14, 15, 16) ஆகிய நாள்களில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக காலை 6.20 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரயில்(எண்.56770) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (அக்.13 முதல் 17வரை) விருதுநகர் - திருநெல்வேலி இடையேயும், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில்(எண்.56769) புதன்கிழமைகளில் மதுரை - திருநெல்வேலி இடையேயும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
 கல்பட்டிச்சத்திரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அக்.15-17 ஆம் தேதி வரை திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில்(எண் 56822) 115 நிமிடங்கள் தாமதமாக திருச்சி சென்று சேரும்.  திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அக்.13 ஆம் தேதி(சனிக்கிழமை) மட்டும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா விரைவு ரயில்(எண்.16343) 80 நிமிடங்கள் காலதாமதமாக மதுரைக்கும், கோவை - நாகர்கோவில் ரயில்(எண்.56320) 45 நிமிடங்கள் காலதாமதமாகவும் நாகர்கோவிலுக்கும்,  திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில்(எண் 56826) 130 நிமிடங்கள் காலதாமதமாக ஈரோட்டுக்கும்,  திண்டுக்கல்-மயிலாடுதுறை இணைப்பு ரயில்(எண் 56822) 115 நிமிடங்கள்  தாமதமாக திருச்சிக்கும் சென்று சேரும்  என்று அறிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com