மேலூர் அருகே கோயில்  திருவிழா: ஏழை காத்த  அம்மனாக சிறுமிகள் தேர்வு

வெள்ளலூர் பகுதியில் ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை யொட்டி அம்மனாக 7 சிறுமியரை செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தனர்.

வெள்ளலூர் பகுதியில் ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை யொட்டி அம்மனாக 7 சிறுமியரை செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தனர்.
இத் திருவிழாவில் 7 சிறுமியரை ஏழை காத்த அம்மனாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதற்காக பாரம்பரிய வழக்கப்படி வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் கரை வரிசைப்படி சிறுமியர்கள் வெள்ளலூரில் உள்ள கோயிலில் திரண்டனர். அதில் 7 சிறுமியரை அம்மனாக கோயில் பூசாரி சின்னத்தம்பி தேர்வு செய்தார்.
  செவ்வாய்க்கிழமை முதல் இச்சிறுமியர் கோயில் வீட்டிலேயே தங்கியிருப்பர். மேலும், இப்பகுதி மக்கள் 15 நாள்களுக்கு விரதம் மேற்கொள்வர். கோயில் வீட்டிலுள்ள 7 சிறுமியரும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொள்வர். 15 ஆவது நாளில் மண் கலயத்தில் பால் ஊற்றி, அதில் தென்னம்பாளையை வைத்து மது எடுப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படும். மது கலயங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com