சாலையில் கிடந்த ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸார் பாராட்டு

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  பாராட்டினர்.

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார்  பாராட்டினர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் செல்லத்துரை (49).  ஆட்டோ ஓட்டுநரான இவர் வியாழக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சமயநல்லூரில் இருந்து பரவை சென்றுள்ளார். 
ஊர்மெச்சிகுளம் அண்ணாநகர் அருகே சென்றபோது சாலையில் ஒரு பை கிடந்துள்ளது. ஆட்டோவை நிறுத்தி பையை எடுத்த செல்லத்துரை, பையை திறந்து பார்த்தபோது அதில் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்களுடன் சமயநல்லூர் காவல் நிலையத்துக்குச்சென்ற செல்லத்துரை பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் பணத்தை எண்ணிப் பார்த்ததில் 
ரூ.80 ஆயிரம் இருந்துள்ளது.
   இந்நிலையில் பணத்தை தவறவிட்டவர்கள் பையைத் தேடியும் கிடைக்காத நிலையில் சமயநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வெள்ளிக்கிழமைச் சென்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  சமயநல்லூர் விஎம்டி நகரைச் சேர்ந்த ஜீவானந்தம், அவரது மனைவி மாயாராணி என்பதும், பணம் அவர்களுடையதுதான் என்பதும் உரிய ஆவணங்களின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரூ.80 ஆயிரத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் செல்லத்துரையை சமயநல்லூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் மோகன்குமார், காவல் ஆய்வாளர் தர்மர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com