பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சபாரத்தினம் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சபாரத்தினம் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டுசுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அட்டாக்பாண்டி, சபா என்ற சபாரத்தினம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மதுரை 4 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில்  விசாரிக்கப்பட்டு வருகிறது. 
இந்த வழக்கில் ஜாமீனில் வந்த சபாரத்தினம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் இருந்து வந்தார். இதேபோல கடந்த ஆண்டு கீரைத்துறை பகுதியில் வழிவிட்டான் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையிலும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து 2 வழக்குகளிலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து, பிடிவாரண்டு பிறப்பித்தது. போலீஸôர் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில்  சபாரத்தினம் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை செப்.28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் திலகவதி உத்தரவிட்டதன்
பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com