முன்னாள் வங்கி மேலாளர் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் மோசடி

மதுரையில் வீட்டை வாங்கியதாகக் கூறி போலி ஆவணங்கள்  மூலம் முன்னாள் வங்கி மேலாளர் குடும்பத்தினரிடம்

மதுரையில் வீட்டை வாங்கியதாகக் கூறி போலி ஆவணங்கள்  மூலம் முன்னாள் வங்கி மேலாளர் குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை புதுநத்தம் சாலை ராதா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி திலகவதி. சேகர் அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.  இவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால் சேகர் தனக்குச் சொந்தமான வீட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்று விட்டு வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்திருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் வீட்டை வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளார். 
இதற்காக ரூ.10 லட்சம் முன்பணமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் சேகர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதை பயன்படுத்திய பாலசுப்ரமணியன் ரூ.50 லட்சத்தை  சேகருக்கு கொடுத்ததாகவும், அவர் வீட்டை தனக்கு பதிவுசெய்து கொடுத்ததாகவும் போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளார். 
இதுதொடர்பாக சேகரின் மனைவி திலகவதி அளித்த புகாரின்பேரில் மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பாலசுப்ரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com