குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி மதுரையில் எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரம் ஆக உயர்த்துவது என்பன உள்ளிட்ட

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரம் ஆக உயர்த்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்ஆர்எம்யு மேற்கு கிளைச் செயலர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
கோட்டச் செயலர் வி.ராம்குமார், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  ரயில்வே ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்டச் செயலர் முருகானந்தம், உதவி கோட்டச் செயலர் சபரிவாசன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அருண் பிரசாத், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
 புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வேத் துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com