ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
   இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு வழிவிடு முருகனுக்கும், கோயிலில் உள்ள பிற பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.
 பின்னர், கோயில் தங்கக் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதையடுத்து, கோயில் அர்ச்சகர் வையாபுரி விழா கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின்னர், அனைத்து தெய்வங்களுக்கும் காப்புக்கட்டும் உற்சவம் நடைபெற்றது.
    இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9 ஆம் தேதி பால் குடமும், அன்று இரவு கோயில் முன்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 10 இல் உற்சவர் முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.
  கொடியேற்ற விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அறங்காவலர் சு. கணேசன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com