திருவாடானையில் சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு: உயர் நீதிமன்ற ஆணையர்கள் ஆய்வு

திருவாடானைப் பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

திருவாடானைப் பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுப்படி, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   திருவாடானை பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன.
      இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, திருவாடானைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள ஆணையராக வசந்தவள்ளி உள்பட இருவர் நியமிக்கப்பட்டனர். இவர்கள், திருவாடானை ஒன்றியத்தில் திருவாடானை, ஆதியூர், குளத்தூர், திருவெற்றியூர், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
  அதேபோல், ஆணையர் சரவணன் உள்பட இருவர் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  
  இவர்கள் இந்த ஆய்வு அறிக்கையினை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.
 இவர்களுடன், திருவாடானை வட்டாட்சியர் தாமஸ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் சென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com