கூரியூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
  ராமநாதபுரம் அருகே கூரியூர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்களிடம் பேசிய பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூரியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை கண்மாய் பகுதியில் அமைந்துள்ளதால், மழை காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 விவசாயிகளின் நலனுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திமுகவினர் தான் வைகை ஆறு, தாமிரவருணி, காவிரி ஆறுகளிலிருந்து மணல் அள்ளி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்திற்கு விற்றனர். விவசாயத்தை பேரழிவுக்கு கொண்டு சென்ற இதே திமுகவினர் தான் விவசாயிகளுக்காக போராடுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தற்போது அரசியலில் பலவீனப்பட்டுள்ளதை அறிந்த திமுகவினர் அரசியலில் தங்களை பலப்படுத்திக்கொள்ள சிறிய கட்சிகளை இணைத்து அரசியல் லாபத்திற்காக இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
புதுதில்லியில்  போராடும் அய்யாக்கண்ணுவிடம் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அவர் யாரால் தூண்டப்பட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com