நூல் வெளியீட்டு விழா

பரமக்குடியில் வழக்குரைஞர் சி. பசுமலை எழுதிய மண்ணுக்குள் எவ்வுயிரும் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடியில் வழக்குரைஞர் சி. பசுமலை எழுதிய மண்ணுக்குள் எவ்வுயிரும் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
   பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு,  ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் செ. சந்தியாக தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் க. முத்துக்கண்ணன், கே.வி.ஆர். கந்தசாமி, தியாகி இமானுவேல் பேரவை பு. சந்திரபோஸ், இந்திய கம்யூனிஸ் மாவட்டச் செயலர் என்.கே. ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   பின்னர், வழக்குரைஞர் சி. பசுமலை எழுதிய மண்ணுக்குள் எவ்வுயிரும் என்ற நூலினை, தமிழ் தேசிய முன்னணி இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட, அந்த அமைப்பைச் சேர்ந்த க. பரந்தாமன் பெற்றுக்கொண்டார். நூல் ஆய்வுரை குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் என்.எஸ். பெருமாள், ந. முருகேசன் ஆகியோர் பேசினர்.
   நூலை வெளியிட்டு பழ. நெடுமாறன் பேசியது: சமூகத்தில் சிந்தனை தாக்கத்தை ஏற்படுத்துவதாக நாம் எழுதும் எழுத்துகள் இருக்க வேண்டும். எழுத்துகள் சாகாவரம் பெற்றவையாக இருக்க வேண்டும். சமூகக் கண்ணோட்டம் இல்லாத எழுத்து கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும்.
   தற்போது மதவாதம் தலைதூக்கி மிரட்டுகிறது. ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந்த மண்ணை பாழ்படுத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
   முன்னதாக, வழக்குறைஞர் க.லிங்கமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். சு. மரியஆக்னஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com